‘யூ டியூப்’ நிறுவனம் 2002 ஆம் ஆண்டின் டாப்10 படைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், விஜய் பட பாடலை தவிர மற்ற எந்த தமிழ் படைப்போ படைப்பாளிகளோ இடம்பெறவில்லை.
திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் கனவை சுமக்கும் படைப்பாளிகளின் வாடி வாசலாக யூடியூப் தளம் விளங்கி வருகிறது. இந்த தளம் 2002 ஆம் ஆண்டின் சிறந்த 10 படைப்புகளை வெளியிட்டுள்ளது. இதில், சிறந்த ட்ரெண்டிங் வீடியோகள், இசை, குறும்படங்கள், கிரியேட்டர்கள், பெண் படைப்பாளிகள் மற்றும் சிறந்த படைப்பாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் விஜயின் பீஸ்ட் பட பாடலை தவிர தமிழகத்தைச் சேர்ந்த எந்த படைப்பும் படைப்பாளிகளும் இடம்பெறவில்லை.
சிறந்த வீடியோக்களில் ‘ஏஜ் ஆப் வாட்டர்’ முதலிடத்தை பெற்றுள்ளது. இப்பட்டியலில் பீஸ் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலின் முதல் விளம்பரம் நான்காம் இடத்தில் உள்ளது. சிறந்த இசை வீடியோக்களில் ‘புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஸ்ரீ வள்ளி” பாடல் முதலிடம்; ‘சாமி….’ பாடல் மூன்றாம் இடம் “ஊ ஆண்டவா” பாடல் ஏழாம் இடத்தை பெற்றுள்ளது.
அரபிக் குத்துப்பாடல் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. சிறந்த 20 படைப்பாளிகளில், ‘ஷார்ட்ஸ் பிரேக்’ முதலிடத்தை பெற்றுள்ளது. பெண் படைப்பாளிகளில் ஜான்வி பட்டேல் முதலிடத்தை பிடித்துள்ளார்.