தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணியில் பிரகார கல் மண்டபம் நிருவும் திருப்பணிகளை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோயில் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த கோவில் திருப்பணி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்ரீதேவி பூதேவி சன்னதிகள் மாற்றி அமைத்தல், ஆண்டாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி மாற்றி அமைத்தல், கோயில் பிரகாரத்தை சுற்றி 63 கல் தூண்கள் அமைத்து பிரகார கல்மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இந்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டு காலதாமதம் ஏற்பட்டது. திமுக ஆட்சி அமைந்தபின் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 30 மாதங்களில் 1,413 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலில் மீண்டும் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று கல்தூண் அமைக்கும் பணியை தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் அன்புமணி தலைமையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். திருக்கோவில் பிரதான அர்ச்சகர் வைகுண்டம் தலைமையிலான வைஷ்ணவ ஆச்சாரியர்கள் மந்திரங்களை முழங்கி பூஜைகள் செய்தனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில்… அறங்காவலர் குழு பொறுப்பேற்று இரண்டு மாத காலத்திற்குள்ளாகவே இந்த திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எல்லா பணிகளும் நன்கொடையாளர்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. பணிகளை வேகமாக விரைவாக நடத்தி முடிக்கப்படும் என இறைவன் அருளால் உறுதியாக கூறுகிறேன் என்ற அவர் அழுகின முட்டை குறித்து அமைச்சர் கடந்த வாரத்தில் பேட்டியளித்தார். அது கடும் வைரலானது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? நோ கம்மேண்ட்ஸ் (NO COMMENTS) என்று கூறி கடந்து சென்றார்..
நிகழ்ச்சியில், ஸ்ரீ வைகுண்டபதி அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி, பாலசங்கர், மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.