Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில் மழை; தண்ணீர் தேங்கியுள்ள பல்வேறு இடங்களில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு: பாஜக மாநில துணைத்தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி…!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது… அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 22.11.2023 காலை முதல் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி நகரில் உள்ள தமிழ்ச்சாலை ரோடு, வஉசி சாலை, லூர்தம்மாள்புரம், ஆரோக்கியபுரம், மேட்டுப்பட்டி, முருகன் தியேட்டர், கலைஞர் நகர் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீரானது சாலையின் ஓரங்களில் தேங்கியுள்ளது.

ஆகவே, லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், ஆகிய பல்வேறு பகுதிகளில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.. மேலும் தண்ணீர் தேங்கியுள்ள வீடுகளிலும் காலை, மதிய உணவும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது..

இதுகுறித்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.. அதனை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலமும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது..

கலைஞர் நகர், பொன் சுப்பையா நகர், அன்னை தெரசா நகர், ஆகிய பகுதிகளில் ஏசியன் டெவலப்மென்ட் மூலம் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை தொடங்கப்பட உள்ளது.. இது பள்ளமான பகுதியாகும்.. நீரை பம்பு மூலம் வெளியேற்றுவதா? கிராவிட்டி மூலம் போய் விடுமா என்பதை கொண்டு ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் மழை வந்துவிட்டது. மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.. மழை எங்கெங்கு தேங்கி இருக்கிறதோ அங்கே மக்களுக்கு காலை உணவு தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மதிய உணவும் கொடுக்கப்பட உள்ளது..

மேலும், பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா இதற்கு முன்னர் ஆய்வு செய்து திமுக அரசை குற்றம் சாட்டினார்.. இது குறித்து கேட்ட கேள்விக்கு? ஆயிரம் கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்தது அதிமுக எடப்பாடி ஆட்சியில், மக்களுக்கு தேவையான திட்டத்தை அவர்கள் தரவில்லை.. பூங்காகள் கட்டவே தான் திட்டம் கொண்டு வந்தார்கள். இருக்கிற ரோட்டையெல்லாம் 14 அடி ரோடாக குறுக்கியது தான் மிச்சம், அதிமுக ஆட்சி காலத்தில் தான் திட்டங்கள முடிக்கப்பட்டது.. முடிவடையாமல் இருந்த பணிகள் தற்போது முறைப்படி செய்து வருகிறோம். மக்களுக்கு தேவையான கால்வாய் வசதி செய்து தரப்படவில்லை. பூங்காக்களுக்கேல்லாம் ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்கள். ஆகவே, ஸ்மார்ட் சிட்டி முறையாக திட்டமிடப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்..

Related posts

கோவில்பட்டி அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து அனுமதியின்றி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் – போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களை போலீசார் கைது செய்தனர்.

Admin

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 27ந் தேதி போராட்டம்; மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கம் முடிவு!.

Admin

பூலித்தேவர் 308வது பிறந்தநாள்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!