Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில் பரவலாக மழை: அநேக இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி மூலம் சீர்செய்யப்பட்டு வருவதாக மேயர் பேட்டி;

குமரிக் கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு – மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது…

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 22.11.2023 காலை முதல் மழை தொடர் மழை பெய்து வருகிறது. இதில், புதன்கிழமை காலை முதல் வியாழன் அதிகாலை வரை அதிகபட்சமாக, திருச்செந்தூர் 88 மி.மீ, கழுகுமலை 87 மி. மீ, காயல்பட்டிணம் 103 மில்லி மீட்டர் மழையும், விளாத்திக்குளம் 83 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடியில் 30.30 மி.மீ., சராசரியாக மாவட்ட முழுவதும் 44.53 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி நகரில் உள்ள தமிழ்ச்சாலை ரோடு, ரயில்வே நிலையம் செல்லும் சாலை, ரயில்வே தண்டவாளம், வஉசி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீரானது சாலையின் ஓரங்களில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.. பல இடங்களில் 80% தண்ணீர் தேக்கம் இல்லை.. மேலும், தண்ணீர் கட்டகூடிய இடங்களில் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பொது மக்களுக்கு நோய் வராதபடி, மெடிக்கல் கேம்ப் போடப்பட்டுள்ளது.. ஆகவே, தூத்துக்குடி மாநகரில் எந்த பிரச்னையும் இல்லை என்றார்..

மேலும், மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி அறிவித்துள்ளார்.. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.. மேலும், தூத்துக்குடியில் விசைப்படகு, நாட்டு படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை

Related posts

சமூகப் பொருப்புணர்வு திட்டத்தின் கீழ் என்.சி. ஜான்&சன்ஸ் நிறுவனம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கல்.

Admin

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர திமுக இளைஞரணி சார்பில் தூத்துக்குடியில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கும் முகாம்- அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!.

Admin

கோவில்பட்டி அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து அனுமதியின்றி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் – போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களை போலீசார் கைது செய்தனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!