Thupparithal
செய்திகள்

கடலோர காவல் படையினர் ஒரு சிலருக்கு நீச்சல் கூட அடிக்க தெரியாது.. அவர்களை நம்பி சென்றால் எப்படி பிழைக்க முடியும்-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சால் சர்ச்சை…!

உலக மீனவர் தினம் இன்று (நவ 21) கொண்டாடப்பட்டு வருகிறது.. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பாக உலக மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது.. தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார்…

அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், உலக மீனவர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் மீனவர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த மீனவர் தின விழாவில் கலந்து கொண்டிருப்பது சதோஷமாக உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தேன்.. ஆளுநர் மாளிகையில் இருந்து குறைகளை கேட்டதும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை சமர்ப்பித்தேன்.. தனிப்பட்ட முறையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர், மத்திய அமைச்சர் பருசோத்தம் ரூபாலா அவர்களை சந்தித்து குறைகளை எடுத்துரைத்தேன்.

மாநில அரசு அதிகாரிகளிடமும் குறைகளை எடுத்துரைத்தேன்… நம்பிக்கையாக சொல்கிறேன் உங்கள் பிரச்சினையை முடித்து தருகிறேன். மீனவ சொந்தங்கள் தேச வளர்ச்சிக்கு முழு பங்களிப்புடன் இருக்கின்றனர்.. உயிரை பணயம் வைத்து மீன்பிடிக்க செல்கின்றார்கள்… மீனவர்கள் மீன்களை பிடித்து ஊட்டச்சத்து உணவு கொடுக்கிறார்கள்… உலகம் முழுவதும் நிலத்தில் இருந்து கிடைக்கும் உணவுகள் முழுமை அடையாது.. ஊட்டச்சத்து உணவான கடல் மீன்களிடம் தான் சத்தான உணவுகள் இருக்கிறது… அதற்காக தான் ஐநா சபை உலக மீனவர் தினத்தை கொண்டாடி வருகிறது..

மேலும், மீனவர்கள் நாட்டின் முதல் பாதுகாவலர்கள், நமது தேசம் மிக பெரிய கடல் எல்லை கொண்டதாக உள்ளது.. நாட்டின் மற்ற பகுதியில் பாதுகாப்பு படைகள் உள்ளது.. ஆனால் கடலில் பாதுகாப்பு மீனவர்களை நம்பி தான், கடலோர காவல் படையில் மீனவர்கள் பங்கு பெற வேண்டும்.. ஏனெனில் கடலில் பாதுகாப்பு அனைவராலும் முடியாது…. மற்ற மாநில கடலோர காவல் படையினர் ஒரு சிலருக்கு நீச்சல் கூட அடிக்க தெரியாது.. அவர்களை நம்பி சென்றால் எப்படி பிழைக்க முடியும். கூடிய விரைவில் மத்திய அரசால் இளைஞர்கள் கடலோர காவல் படையில் மீனவர்களை சேருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. கடல் குறித்து மீனவர்கள் தவிர யாருக்கும் தெரியாது..

மீனவர்களின் குறைகளை தீர்க்க வேண்டிய கட்டாயம் தற்போது உள்ளது.. இந்திய தேசம் மிக பெரிய கடல் 20 லட்சம் சதுர பரப்பு, ஆகவே நாம் கடல் வளத்தை காக்க வேண்டும்… நாம் அவைத்தகுதி இல்லாதபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 24 மீட்டர் ஆழ்கடல் மீன்பிடி பதிவு இல்லாமல் உள்ளது. அதனையும் சரி செய்யப்படும்…ஆழ்கடல் மீன்பிடிக்க ஒரு நாள் அல்ல, பல நாள் சென்று வர வேண்டிய சூழ்நிலையை நான் நன்கு அறிந்துள்ளேன்…

மீன்பிடி சமுதாயம் நாட்டின் மிக பெரிய பங்களிப்பு, மீனவ சமுதாயம் பிரதினிதித்துவம் இல்லாததால் சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மிக பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும், நமது தேசம் வளர்ந்து கொண்டு வருகிறது.. அதில் மீனவ பங்களிப்பும் இருக்கப்பட வேண்டும்..

பிரதமர் மீனவர்களுக்கு அனைத்தும் செய்ய வேண்டும் என உத்தரவு போட்டு உள்ளார்.. தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் நான் பேசும் போது, மீனவ மக்களுக்கு அதிகம் கவனம் செலுத்துவதாக என்னிடம் கூறியுள்ளார்.. மத்திய அரசால் மீனவர்களுக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்படும்..

மீனவ மக்கள் என் இதயம் முழுவதும் நிறைந்து உள்ளார்கள்.. ஆகவே, உங்கள் குறைகளை கூற ஆளுநர் மாளிகை கதவு திறந்து இருக்கும்… மீனவ சமுதாயம் அனைத்திலும் இளைஞர்கள், பெண்கள் திறமை வாய்ந்தவர்கள்.. ஆகவே, நான் வாழ்த்துகிறேன் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்று, உறுதியாக நம்பிக்கை வைக்கின்றேன்.. மேலும், உயர்த்த பதவிகள் பெற்று வளர்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன் என்றார்..

Related posts

தூத்துக்குடி, சிலுவைப்பட்டியில் நீர், மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

Admin

வாக்காளர் பட்டியலில் திருத்தம்; பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்களா? என மாநகராட்சி ஆணையர் வீடுகளில் ஆய்வு!.

Admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் மக்களுக்கு எந்த நோயும் ஏற்படவில்லை. சிலர் வீண் வதந்திகள் பரப்பி வருகின்றனர்..மக்கள் நம்ப வேண்டாம்- ஸ்டெர்லைட் ஆலையில் பல வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த பணியாளர்கள் கூட்டாக பேட்டி…!

Admin

Leave a Comment

error: Content is protected !!