Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை ஓட்டை வழியே மழைநீா் ஒழுகியதால், பேருந்துப் பயணிகள் அவதி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. மேலும், இன்று காலை முதலே மழை பெய்த நிலையில், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு அத்திமரப்பட்டி-க்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரையின் வழியாக மழைநீா் பேருந்தின் உள்ளே ஒழுகி இருக்கைகளில் கொட்டியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ஒரு சிலா் பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனா். பெரும்பாலானோா் மழையில் நனைந்த படியும், பேருந்துக்குள் ஓரமாக ஒதுங்கி நின்றும் பயணித்துள்ளனா். மேலும், ஓட்டுநர் இருக்கையின் மீதும் மழைநீர் ஒழுகியதால் பின்னால் இருந்து பயணி ஒருவர் குடை பிடித்து அவரை நனையாமல் பார்த்து கொண்டதாகவும் கூறப்படுகிறது..

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், இம்மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் உள்ளன. எனவே பழுதான பேருந்துகளை அகற்றி புதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்..

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (நவ 18) சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ 19) அதிகாலை வரை தூத்துக்குடியில் 8.3 மி.மீ., குலசேகரப்பட்டணம் 15மி.மீ., சாத்தான்குளம் 20.8 மி.மீ., திருச்செந்தூர் 33 மி.மீ, காயல்பட்டிணம் 33 மில்லி மீட்டர் மழையும் குலசேகரப்பட்டினத்தில் 15 மில்லி மீட்டர் மழையும் சாத்தான்குளத்தில் 20 மில்லி மீட்டர் மழையும் தூத்துக்குடியில் 8 புள்ளி 30 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக மாவட்ட முழுவதும் 15 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. என மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..

Related posts

வீரன் அழகுமுத்துக்கோன் 313வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்தவர்களும்,போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்; சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் மீது வழக்கு பதிவு!.

Admin

தூத்துக்குடியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Admin

சொத்து குவிப்பு வழக்கு; அமைச்சர் கீதாஜூவன் மற்றும் அவரது குடுமபத்தினர் 6-பேர் விடுதலை தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம் உத்தரவு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!