Thupparithal
க்ரைம்

தூத்துக்குடியில் மாடுகளை திருடிய 2 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு பிடித்த போலீசார்..!

தூத்துக்குடி முருகேசன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைகனி மகன் உத்தண்டுராஜ் (39) இவர் கடந்த 15.11.2023 அன்று இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது அதில் 2 மாடுகள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உத்தண்டுராஜ் நேற்று (18.11.2023) அளித்த புகாரியின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான மாரியப்பன் மகன் வேலாயுதம் (24), செம்புலிங்கம் மகன் மாசானமுத்து (21) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி மாட்டு கொட்டைகையில் கட்டியிருந்த 2 மாடுகளை மினி சரக்கு வாகனத்தின் மூலம் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் எதிரிகளான வேலாயுதம் மற்றும் மாசானமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 2 மாடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தூத்துக்குடியில் உள்ள பிரபல வெஜிடபிள் மார்க்கெட்டில் தங்களது பங்குகளை தராமல் ஏமாற்றி வருவதாக வெஜிடபிள் மார்க்கெட் தலைவர் மீது இளைஞர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்..!

Admin

தூத்துக்குடியில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிக் கொலை: பயங்கரம்!

Admin

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் சுப்ரமணியபுரம் பத்திரகாளியம்மன் கோயில் மற்றும் சிஎஸ்ஐ தேவாலய தரப்பினர் இடையே சுற்றுச்சுவர் கட்டுவதில் பிரச்சினை போலீஸ் குவிப்பு!

Admin

Leave a Comment

error: Content is protected !!