தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதூண்ணாங்குடி பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு புதிய மின் கம்பம் அப்பகுதியில் நடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் போது மின் கம்பத்தின் கீழ் கான்கிரீட் கலவை போடாமல் மின் வாரிய தொழிலாளர்கள் மின்கம்பத்தை வெறுமண நட்டு வைத்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று பெய்த மழையின் காரணமாக டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் மின்வாரியத் துறையினர் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
மேலும், மின்வாரியத் துறையினர் இதுவரை சம்பவ இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.