தூத்துக்குடி மாவட்ட, கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு விளாத்திகுளம் வேம்பார் முதல் தென்காசி மாவட்டம் புளியரை வரை தாபல் நிலையங்களை உள்ளடக்கிய தபால் தலைமை நியைய கோட்டமாக 1972 ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 50 ம் ஆண்டு நிறைவையொட்டி பொன்விழா ஆண்டு விழா கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தாபல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் பணியாளர்களை கௌரவிக்க விதமாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி தலைமை அஞ்சல் அதிகாரி ராமச்சந்திரன், கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ், உதவி கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.