Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி கல்லூரி மாணவிகளுக்கு கல்விஉதவிதொகை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு ஏ.பி.சிமகாலட்சுமி அம்மாள் நினைவுகல்வி உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் கல்வி உதவித்தொகையாக மாணவியருக்கு 7,40,700 ரூபாயை வழங்கியது.

கல்லூரித் தாளாளர் சொக்கலிங்கம், செயலாளர் சுப்புலட்சுமி, முதல்வர் பாலஷண்முகதேவி ஆகியோர் மாணவியருக்கு உதவித் தொகையைப் பெற்றுத் தந்தனர்.

நிகழ்ச்சியில், கணினித்துறைத் தலைவர் ஷியாமலாசூசன் வரவேற்புரையாற்றினார். முதல்வர். பாலஷண்முகதேவி வாழ்த்துரை வழங்கினார். விற்பனை மேலாளர் மோகன் பிரவீணா, ஹைமாஸ்டீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்துஸ்தான் நிறுவனத்தின் மதுரை மண்டல பொதுமேலாளர் செல்ல பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

சுயநிதிப் பிரிவு வணிகவியல்துறை, கணிதத்துறை, இயற்பியல்துறை, கணினி அறிவியல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 118 மாணவியர் கல்வி உதவித்தொகையைப் பெற்றனர். மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை மாணவியருக்கு வழங்கப்பட்டது.

இந்துஸ்தான் நிறுவனத்தைச் சார்ந்த பரமசிவம், கீர்த்தி, சிவகுமார், பிரபாகரன், ஆனந்தகீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்வி உதவித்தொகை வழங்கும் இந்நிகழ்ச்சி குறித்து மாணவியர் பின்னூட்டம் வழங்கினர். மாணவியர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆசிரியர்களும் ஆசிரியர், அலுவலர் ரேவதி உறுதுணையாக இருந்தனர்.

இறுதியாக, வணிகவியல் துறைத் தலைவர் சித்ரா செல்லம் நன்றியுரையாற்றினார்.

Related posts

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, மாநகர் 3 வார்டு ஹவுசிங் போர்டு காலனி பூங்காவில் “பகுதி சபா கூட்டம்” மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

Admin

தூத்துக்குடி கோவில் அறங்காவலர்கள் நியமன ஆணையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

Admin

தூத்துக்குடி, அஞ்சலகங்களில் விரைவு மற்றும் பார்சல் தபால்கள் புக்கிங் செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Admin

Leave a Comment

error: Content is protected !!