Thupparithal
செய்திகள்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, மாநகர் 3 வார்டு ஹவுசிங் போர்டு காலனி பூங்காவில் “பகுதி சபா கூட்டம்” மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, மாநகர் 3 வார்டு பகுதிக்கு உட்பட்ட “பகுதி சபா கூட்டம்” தூத்துக்குடி மூன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் 5 பேர் அடங்கிய ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்துள்ளன.

கூட்டத்தில், மக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்படும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், அதிகாரிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (01.11.2022) உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிளில் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

3 வார்டு பகுதி கூட்டமானது தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பூங்காவில் வைத்து ரெங்கசாமி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி “பகுதி சபா கூட்டமானது” நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி 3 வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு மூன்றாவது வார்டு ரெங்கசாமி சபா உறுப்பினர் பிரபாகர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

பின்னர் அங்குள்ள திறந்தவெளி அரங்கில் வார்டு மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதியான மழை நீர் வடிகால்,சாலை, மற்றும் மின் விளக்கு, வாகனங்கள் மெதுவாக செல்வதற்கான வேகத்தடை, அமைத்துக் கொடுத்திட வேண்டும் என வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில், 3வது வார்டு பகுதி சபா உறுப்பினர்கள், பிரபாகர், செல்வராஜ்,டெனி, ஜவகர்,ஜெயபிரகாஷ், ஆகியோரும் மற்றும் 3வது வார்டு ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்!.

Admin

பெற்றோர்கள், ஆசிரியர்கள் அறிவுரைகளை மாணவ, மாணவிகள் கேட்டு நடக்க வேண்டும். தூத்துக்குடி பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!.

Admin

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாள்; புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!

Admin

Leave a Comment

error: Content is protected !!