தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91வது பிறந்த நாள் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முத்து கணேஷ் தலைமையில் ஏ.பி.ஜே அப்துல்கலாம் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அப்துல் கலாம் பற்றி பேச்சுப்போட்டி ஓவிய போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டி, மகளிர் மகளிர் அணி ரதிதேவி, மற்றும் நிர்வாகிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.