Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது.

தமிழகத்தில் இரண்டு உயர் நீதிமன்றங்கள் மற்றும் 234 க்கும் மேற்பட்ட கீழமை நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்களும் , தாலுகாவில் முன்சிப் /குற்றவியல் நீதிமன்றங்களும் இயங்கி வருகிறது. இதில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தாலுகாவானது பெரும்பான்மையாக பட்டியல் பழங்குடி வகுப்பைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஒரு தாலுகா ஆகும்.

தமிழகத்தில் விதிவிலக்காக இந்த தாலுகாவில் மட்டும் நீண்ட நெடுங்காலமாக நீதிமன்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ஓட்டப்பிடாரம் பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி குரூமூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், ரூரல் டிஎஸ்பி சந்திஸ், நீதிபதிகள் பிரித்தா, செல்வகுமார், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன், மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மாவீரன் பகத்சிங் 116வது பிறந்தநாள் விழா; கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் விடுதலைப்போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங்கின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Admin

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சிய‌ர் தகவல்!

Admin

தூத்துக்குடியில், கல்லூரி முதலாமாண்டு மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல்: அரசு மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!