இந்தி எதிர்ப்பு போராட்டம் இன்று (15.10.2022) தலைநகரம் முழுவதும் நடைபெறும் என்று திமுக மாநில இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின், மற்றும் மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆணைக்கிணங்க தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டமானது, தூத்துக்குடி, சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது.
திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மற்றும் மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜான் அலெக்சாண்டர், ஆகியோர் தலைமையில் திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், மேயருமான ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
மேயர் பேசுகையில்; பல்வேறு மாநிலங்களில் அவர்களது தாய் மொழியில் தான் பேசி வருகிறார்கள். ஒரு சில மாநிலங்கள் மட்டுமே இந்தி பேசப்படுகிறது. நாங்கள் இந்தி கற்பவர்களை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொல்லுவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
இரண்டு தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் கலைஞர் கருணாநிதி புகைப்படம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் அடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில், மாநகர தலைவர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், மாணவரணி துணை செயலாளர் முத்து துரை,மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.