Thupparithal
செய்திகள்

கடந்த வருடத்தில் குற்றாலத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய நிஜ ஹீரோவுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கார் டிரைவராக பணி!.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (24), இவர் அப்பகுதியில் டாக்சி டிரைவராக உள்ளார். இவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஹரிணி என்ற குழந்தை தனது குடும்பத்தினருடன் அருவியில் குளித்தபோது தண்ணீரில் தவறி விழுந்து பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. சம்பவத்தைப் பார்த்த விஜயகுமார், உடனடியாக செங்குத்தான பள்ளத்தாக்கில் குதித்து, பலத்த நீரோட்டத்தில் தத்தளித்தார். குழந்தையை தூக்கி சில நிமிடங்களில் பாதுகாப்பாக அழைத்து வந்தார்.

விஜயகுமாரின் துணிச்சலான முயற்சியை சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பாராட்டினர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் விஜயகுமாரை, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்-ன் கார் டிரைவராக பணியமர்த்தபட்ட அவர் காரை துடைத்து கொண்டிருந்தார்.

மேலும், இவரை அடையாளம் தெரியாத சிலர் ஆட்சியரின் கார் டிரைவர் புதியதாகவும், சிறு வயது பையனாக உள்ளாரே என்று கடந்து சென்றனர்.

Related posts

அழுகிய முட்டை சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி? அமைச்சர் கீதாஜீவன் கூறிய பதில் என்ன??

Admin

தூத்துக்குடியில் எல்பிஜி முனைய சேமிப்பு திறனளவை 30,000 மெட்ரிக் டன்கள் அதிகரிப்பு செய்து இன்று தொடங்கப்பட்டது.

Admin

குரூப் 2 முதன்மைத் தேர்வுகான இலவச பயிற்சி; நாளை டிச.3ஆம் தேதி துவங்குகிறது.

Admin

Leave a Comment

error: Content is protected !!