தேசமும், தெய்வீகமும் இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இன்று 30-10-2022 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் தலையில், மாவட்ட துணை செயலாளர் அக்பர் முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்கண்ணா, மாநகர செயலாளர் சுஷில்குமார், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சுடலை, அர்ஜுன், இளைஞரணி நகர அமைப்பாளர் பிரிட்டோ, நற்பணி இயக்க நகர அமைப்பாளர் மணிகண்டன்,தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் தவபுத்திரன், இளைஞரணி நகர அமைப்பாளர் ரூவிஸ்டன், வட்ட செயலாளர்கள் மாரிதுரை, சந்தானம், செல்வம், செல்வராஜ், ஜோதிகுமார்,சீனிவாசன், ராமராஜன், ஆட்டோ சுப்பிரமணி,பவுல் பிரபாஹர் , மூன்றாம் மைல் சிவகுமார், நாகூர்கனி, கிளை செயலாளர்கள் லாரன்ஸ், மூர்த்தி, புஷ்பராஜ், மற்றும் தூத்துக்குடி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்துகொண்டனர்.