Thupparithal
செய்திகள்

தேவர் திருமகனாரின் 115 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை –சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை!

தேவர்ஜெயந்தி விழா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது பிறந்தநாள் மற்றும் 60 வது குருபூஜையை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள தேவர் சிலைக்கு தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலசேகர், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கல்பனா, தேனி மாவட்டச் செயலாளர்கள் கோகுல கண்ணன், ஏ பி கண்ணன், அய்யனார், சுரேஷ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு,முத்துக்குமார்,மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் தூத்துக்குடியில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் 3வது மைலில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் மில்லை தேவராஜ், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், மற்றும் காமராஜ், சுந்தர்,மைக்கேல்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி அருகே கால்வாயில் தத்தளித்தவாறு உடலை தூக்கி சென்ற கிராம மக்கள்!

Admin

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கான நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டையை ஏபிஆர்ஓ முத்துகுமார் வழங்கினார். முதல்வருக்கு பாராட்டு

Admin

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு: ஆட்சியர் அழைப்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!