தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் தற்காலிக சுனாமி குடியிருப்பில் சுமார் 20 குடும்பங்களை சார்ந்த மக்கள் கடல் தொழில் செய்து வருகின்றனர். இவர்களை கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி காலத்தில் அரசு சார்பில் கடற்கரை பகுதியில் இருந்து அகற்றி 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை தற்காலிக சுனாமி குடியிருப்பில் குடிசைகள் அமைத்து தங்க வைக்கப்பட்டனர்.
இதில் 13 குடும்பங்களுக்கு சுனாமி குடியிருப்பில் வீடு வழங்கபட்டுள்ளது, மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு இது வரை குடியிருப்பு வீடுகள் வழங்கப்படவில்லை. தற்போது இருக்ககூடிய தற்காலிக சுனாமி குடியிருப்பில் சாலை, தண்ணீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஓலைக்குடிசைகளில் மின்சாரம் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வீட்டு மனை பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும என அப்பகுதி மக்கள் பாஜக விளாத்திக்குளம் ஒன்றிய தலைவர் பார்த்திபன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.