தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள “அருள்மிகு ஶ்ரீ காளியம்மன்” திருக்கோயிலில் முன் மண்டபம் கட்டும் திருப்பணி பூமி பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு முன் மண்டபம் கட்டும் பூமி பூஜையை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.
இதில், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, கழக மாநில பொறுப்பு சண்முகையா, முடுக்குமீண்டான்பட்டி பஞ்சாயத்து தலைவர் கண்ணாயிரம் முத்து, முடுக்குமீண்டான்பட்டி அவைத்தலைவர் வெங்கடாசலம், முடுக்குமீண்டான்பட்டி கிளைச் செயலாளர் அய்யனார், முடுக்குமீண்டான்பட்டி துணை கிளை செயலாளர் துளசிமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, நாலாட்டின்புதூர் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி,புரட்சி பாரதம் கட்சி வடக்கு மாவட்ட அமைப்பாளர் கலைச்செல்வன்,அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கதர் ஸ்டார் சுப்புராஜ், கோமதி, கோபி, முருகன், ஊர் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.