தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரம் பட்டியில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக அய்யாச்சாமி நாடார் இராஜரத்தினம்மாள் அவர்கள் நினைவாக ஏழை, எளிய மாணவர்கள் டி.என்.பி.சி யூ.பி.எஸ். சி காவல் துறை மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேருவதற்கும், தனியார் வேலை வாய்ப்பு பல திறமைகளை உருவாக்கிடும் ஐ.ஏ.எஸ் அகாடமி கட்டிட திறப்பு விழா விருதுநகர் இந்து நாடார் அபிவிருத்தி தரும பண்டு தலைவர் சந்திரமோகன் தலைமையில் முரளிதரன், செல்வராஜ், அண்ணாமலை முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக நாடார் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ், டாக்டர் புகழே கிரி வடமலையாள் வடமலையான் மருத்துவமனை, செல்வராஜன் காளீஸ்வரி குழுமம் உள்ளிடடோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதில், லைலா பிரபாகரன், ராஜ் மல்லிக யோகன், சுஜாதா நாச்சியப்பன், பாரத் ராணி சந்திரசேகர் உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏத்தினர். நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.