முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ-ன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள “அருள்மிகு” ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளர் விஜயராஜ் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில், அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைசர் கடம்பூர் ராஜூ-க்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இவ்விழாவில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் நீலகண்டன் மற்றும்
நகர மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் விஜயகுமார், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், இளாம் மணியாச்சி பஞ்சாயத்து தலைவி ரேவதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜ், அம்பிகை பாலன், கோமதி,கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.