தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில துணை பொது செயலாளர் கலைவேந்தன் கலந்து கொண்டு பேசினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல துணைச் செயலாளர்கள் தென்காசி சித்திக், எட்டயாபுரம் மோசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், மைய மாவட்ட செயலாளர் கணேசன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார், மேற்குமாவட்ட செயலாளர் ஜான் தாமஸ் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நகரச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன், சமூக ஊடக மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் மோகன், மகளிர் அணி அமைப் பாளர் விஜயா அந்தோணி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில், வருகிற ஆக.17-ந்தேதி கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்குதல், ரத்ததான முகாம், பனை விதைகள் நடுதல் நிகழ்ச்சிகள் நடத்தமுடிவு செய்யப்பட்டது. மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று மாநில பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.