தூத்துக்குடி, கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பாக தேரடி திடலில் திமுக அரசு உயர்த்திய பால் ,சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி தலைமையில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை தலைவர் சிவராமன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டதலைவர் சுரேஷ்குமார், தொழில்பிரிவு மாநில செயலாளர் கொம்பன் பாஸ்கர், தொழில்பிரிவு மாவட்ட துணைதலைவர் பாலபொய்சொல்லான், மீனவர்பிரிவு ஜோசப், மகளிர் அணி மாவட்ட துணைதலைவர் உஷாதேவி, ஆன்மிகபிரிவு ஒம்பிரபு, வெளிநாடுவாழ் பிரிவு மணிகண்டன், சமூக ஊடக பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார், மண்டல பொதுச்செயலாலர்கள் சண்முகசுந்தரம், வன்னியராஜ், மண்டல செயலாளர்கள் வேல்கனி, கொரைரா, கந்தசாமி, சித்ரா, தனபால், பொருளாளர் மோகன், கிழக்குமண்டல துணை தலைவர் தனலெட்சுமி, பட்டியல் அணி தலைவர் பாக்கியலெட்சுமி மற்றும் கட்சியினர் திரலானோர் கலந்து கொண்டனர்.