தூத்துக்குடி, பொது நூலக துறைமாவட்ட நூலக ஆணைக்குழு, தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், தூத்துக்குடி அரிமா சங்கம் மற்றும் வ.உ.சி. சிதம்பரம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் இணைந்து நடத்தும் 55 வது தேசிய நூலக வார விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொது மக்களிடையே வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக வ.உ.சி. சிதம்பரம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா சங்கம் டாக்டர் கதிரேசன், மற்றும் அரிமா சங்க செயலாளர் திவாகர், பிரம்ம நாயகம் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாநகர தலைவர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மற்றும் மைய நூலகம் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் முதல்நிலை நூலகர் ராம்சங்கர் நன்றியுரையாற்றினார்.