குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எம் ரைட் திட்டத்தின் கீழ் செயல்படும் ஐஎஸ்ஏபி தொண்டு நிறுவன சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்திநகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவியப்போட்டி நடைபெற்றது.
ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஐ.எஸ்.ஏ.பி தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமையில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் அப்பனசாமி, கெளசல்யா, செவிலியர் காயத்ரி, கிருஷ்ணவேணி, செல்வலட்சுமி, மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.