தூத்துக்குடியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அவரை வரவேற்க கட்சியினர் திரண்டு இருந்தனர்.
இந்நிலையில், கட்சி தொண்டர்கள் என கட்சி துண்டுகளை தோளில் போட்டு கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், ஸ்டெர்லை ஆலை மூடப்பட் டதால் வீழ்ந்தது பொருளாதார என்ற பதாகைகளை கொண்டு பெண்கள் இருந்தனர்.
தொல். திருமாவளவனிடம் மனு அளிப்பதற்காக வந்த நிலையில், கட்சி தொண்டர்கள் பதாகைகளை கிழித்து அவர்களை விரட்டியடித்தனர்.
இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.