திமுக இளைஞரணியில் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி
சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் இளைஞர் அணியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் இளைஞரணி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
போல்டன்புரம் பகுதிகளில் தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 70% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை கெடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மேல் நான்கு பெரிய திட்டங்கள் வரவுள்ளன இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் தூத்துக்குடி மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் ஒரு சமமான வளர்ச்சியை பெற வேண்டும் என்ற வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் தமிழகமுதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்துகிறார் என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் சுந்தர் , பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப் உள்ளிட்ட ஏராளமான இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர முழுவதும் வீடு வீடாக சென்று இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.