Thupparithal
க்ரைம்

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.25கோடி மோசடி வழக்கு: பெண் துணைச் செயலா் கைது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூா் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் மற்றும் சாா்பதிவாளா் ஆகியோா் அடங்கிய குழுவினா் நகைக்கடன் தள்ளுபடிக்காக 2021 செப்.8, 13-ல் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 548 நகைப் பைகளில் 261 பைகளைக் காணவில்லை என்பதும், வைப்புநிதி இருப்பில் இருப்பதுபோன்று போலிக் கணக்கு உருவாக்கி ரூ.25கோடி வரை மோசடி நடந்ததாகவும் தெரியவந்தது.

இதுதொடா்பாக வங்கித் தலைவா் முருகேசப் பாண்டியன், செயலா் தேவராஜ், துணைச் செயலா் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோா் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இந்த வழக்கில் வங்கித் தலைவா் கைது செய்யப்பட்ட நிலையில், உடல்நலம் சரியில்லை எனக் கூறி செயலா் தேவராஜ் முன்ஜாமீன் பெற்றாா்.

துணைச் செயலா் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் தலைமறைவாக இருந்துவந்தாா். இதனிடையே, நீதிமன்றத்தில் அவா் திங்கள்கிழமை (நவ.14) ஆஜராக வேண்டியிருந்ததால், மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன், ஆய்வாளா் பத்திரகாளி ஆகியோா் அடங்கிய தனிப் படையினா் தமிழகம் முழுவதும் அவரைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள சொகுசு பங்களாவில் அவா் இருப்பதாக பொருளாளதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சென்று, அவரைக் கைது செய்து பாளையங்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2ல் ஆஜா்படுத்தினா். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவ­லில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மகளிா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Related posts

தூத்துக்குடி அருகே சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.

Admin

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதல்; சம்பவ இடத்தில் முதியவர் பலி!.

Admin

கேரளாவில் இருந்து முறைகேடாக கடத்திவரப்பட்ட ரூபாய் 7.50 லட்சம் மதிப்புள்ள 8,500 லிட்டர் பர்னஸ் ஆயில் லாரியுடன் பறிமுதல்; குற்ற புலனாய்வுத்துறையினர் நடவடிக்கை

Admin

Leave a Comment

error: Content is protected !!