Thupparithal
க்ரைம்

தூத்துக்குடி அருகே சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடடாரம் அருகே உள்ள எப்போதும்வென்றான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது, மகன்களான பொன்மாடசாமி (31), என்பவருக்கும் முத்துராஜ் (எ) முத்துகுட்டி (26), என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று (27.01.2023) எப்போதும்வென்றான் சோழபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த முத்துராஜ் (எ) முத்துகுட்டிக்கும் அங்கு வந்த பொன்மாடசாமிக்கும் மீண்டும் ஏற்பட்ட தகராறில் பொன்மாடசாமி, முத்துராஜ் (எ) முத்துக்குட்டியை கம்பால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) லோகேஸ்வரன் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலெட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரி பொன்மாடசாமியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி பொன்மாடசாமி மீது ஏற்கனவே எப்போதும்வென்றான் காவல்நிலையத்தில் 7 வழக்குகளும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சாதியை சொல்லி திட்டிய தூத்துக்குடி கூட்டுறவு சங்க அதிகாரி; 5 மாதங்களாக வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழித்த போலீசாருக்கு சென்னையில் இருந்து வந்த உத்தரவு…நடந்தது என்ன…!

Admin

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதல்; சம்பவ இடத்தில் முதியவர் பலி!.

Admin

திருநங்கைகள் பொதுமக்களிடம் அடாவடி செய்தால் அவசர போலீஸ் தொலைபேசி எண் …. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு!

Admin

Leave a Comment

error: Content is protected !!