தூத்துக்குடி, கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் கம்மாவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி மாணவிகள் சிலம்பம் ஆடி, தீ விளையாட்டு விளையாடி அசத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் கம்மாவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்மாநிலகாங்கிரஸ் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சரும், கடம்பூர்.செ.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
மேலும், கபடி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்ற மாணவிக்கு பரிசு தொகையை முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார். விழாவில் பள்ளி மாணவிகள் இசைக்கு ஏற்ப யோகா செய்தும், சிலம்பம் ஆடி அசத்தினர். சில மாணவிகள் சிலம்பத்துடன் தீ விளையாட்டு விளையாடி அசத்தினர்.