Thupparithal
செய்திகள்

அதிமுக முன்னாள் எம்.பி, ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் கனிமொழி எம்.பி 6 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பணி செய்வது மட்டுமின்றி கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்டு வருகிறார்-2ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம்!.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 2ஆண்டு முடிந்து 3ம் ஆண்டு தொடக்கத்தில் உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொது கூட்டம் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி, அன்னை இந்திராநகர் பகுதி இளைஞர் அணி சார்பில் ஹவுசிங்போர்டு பகுதியில் பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. 3வது வார்டு வட்டச்செயலாளர் தெய்வேந்திரன், அவைத்தலைவர் ராஜசேகர், துணைச்செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் பேசுகையில், 2021 மே 7ம் தேதி தமிழக முதலமைச்சராக தளபதி பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் கடுமையாக இருந்த காலக்கட்டம், ஒருவரை ஒருவர் சந்தித்து பேச முடியாமல் உறவினர் வீட்டுக்கு செல்லமுடியாமல் பரிதவித்த காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை தமிழக மக்களை பாதுகாக்கும் கடமை எனக்கு உள்ளது என்பதை உணர்ந்து இந்தியாவில் எந்த முதலமைச்சரும் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தது கிடையாது ஆனால் நம்முடைய முதல்வர் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் நல்லமுறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு அஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொண்டு அனைவருக்கும் தடுப்புசி செலுத்தி கொள்ள அறிவுரை வழங்கி தமிழக மக்களின் நலனை பாதுகாத்தார்.

பின்னர் இரண்டு கட்டமாக மக்களுக்கு நான்காயிரம் வழங்கப்பட்டது. பால்விலை ரூ3 குறைவு, பெண்களுக்கு இலவசபேருந்து பயணம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி படிப்பு உதவித்தொகைக்கு ஆயிரம் முதியோர் உதவி தொகை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க 30 ஆயிரம் கோடி ஓதுக்கீடு விவசாய கடன் நகைக்கடன் தள்ளுபடி, என்று சாதனை பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

10 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. தற்போது தொழில்வளர்ச்சி வேலைவாய்ப்பு என வழங்கப்பட்டு செயல்படாமல் இருந்த நலவாரியங்கள் அனைத்தும் முறையாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுகின்றன. பத்திரிகையாளர்களுக்கும் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைக்கப்படுவது மட்டுமின்றி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செலவிடப்பட்டது. இந்த பகுதியில் கடந்த காலங்களில் மழையால் முத்தம்மாள் காலணி, ரஹ்மத்நகர், தனசேகர் நகர், ஹவுசிங் போர்டு காலணி மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வராவதற்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வரான பின்பும் ஆய்வு செய்து இப்போது அந்த குறைபாடுகள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளார். ஆனால் இந்த பகுதியில் குடியிருக்கும் முன்னாள் எம்.பி, ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் கனிமொழி எம்.பி 6 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பணி செய்வது மட்டுமின்றி கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்டு வருகிறார். இந்த ஆட்சியின் சாதனையும் தொடரவேண்டும் கனிமொழி எம்.பியின் பணியும் நமக்கு தேவை என்பதை உணர்ந்து வரும் காலங்களில் நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்ற பெற வேண்டும். இந்த தொகுதியில் கனிமொழி எம்.பிக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். என்று பேசினார்.

கூட்டத்தில், தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, இலக்கிய அணி அமைப்பாளர் ராமசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் அம்பாசங்கர், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுராமன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரிசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் தர்மராஜ், பூவேஸ்நாதன், செல்வகுமார், ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், பகுதி துணைச்செயலாளர் மகேஷ்செல்வம், மகளிர் அணி அமைப்பாளர் ரமணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பௌஷியாஅபுதாகீர், மாணவரணி அமைப்பாளர் அன்புமணி, துணை அமைப்பாளர் பூமாரி, கவுன்சிலர் காந்திமணி, நிர்வாகிகள் விக்னேஷ்வரன், குலாம் அலிஷா, கமாலுதீன், சேது என்ற சேந்தையன், நெல்சன், உள்பட பல்வேறு அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தர்மராஜ் நன்றியுரையாற்றினார்.

Related posts

குடிநீர் பிரச்னை பொது மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்த பாஜகவினர்!.

Admin

தூத்துக்குடி தூய இஞ்சாசியாா் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Admin

தூத்துக்குடியில் நாளை மறுநாள் 8ஆம் தேதி உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு மேளா.! – ஆட்சியர் தகவல்!

Admin

Leave a Comment

error: Content is protected !!