தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள்கள் நடமாட்டத்தினை ஒழிக்கும் வகையிலும், போதை பொருள் ஒழிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள புளியம்பட்டியில் நேற்று மினி மராத்தான் போட்டி ஏற்பாடு நடைபெற்றது.
இப்போட்டியானது, புளியம்பட்டியில் இருந்து அக்கநாயக்கன்பட்டி வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடைப்பெற்றது. இப்போட்டியை மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில், கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பிரிசுகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கடம்பூர் ஆய்வாளர் சோமசுந்தரம், பசுவந்தனை ஆய்வாளர் சுதேசன், கடம்பூர் உதவி ஆய்வாளர் ரமேஷ், புளியம்பட்டி உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன், கண்ணன், ஒட்டப்பிடாரம் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்…