Thupparithal
செய்திகள்

மாவீரர் பகத்சிங் 92வது நினைவு தினம்; மாபெரும் இரத்ததான முகாமில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

மாவீரர் பகத்சிங் அவர்களின் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் மாவீரர் பகத்சிங் இரத்ததானம் கழக அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

மாவீரர் பகத்சிங் இரத்ததானம் கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமையில், கழக அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பகத்சிங்கின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

இம்முகாமில், கருத்துரிமை கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கின், மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவன தலைவர் செல்வத்துரை, பிரபாகரன் குருதித் கொடை பாசறை நிறுவனத் தலைவர் ரவிக்குமார், மாவீரர் பகத்சிங் இரத்ததானம் கழக கழக அறக்கட்டளை செயலாளர் சண்முகராஜ்,பொருளாளர் மணிகண்டன், அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மகளிர் அணி பத்மாவதி, ஜெயந்தி, ரேவதி, அதிமுக நிர்வாகிகள் மனோகரன், அழகர்சாமி, செல்வகுமார், குழந்தை ராஜ்,ஜெய்சிங், மற்றும் மருத்துவர் தேவசேனா, செவிலியர்கள் லட்சுமி காந்தம், ராதா, விஜயலட்சுமி, ஆய்வுக நுட்புநர் சேவியர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடியில், வரும் 13-ந் தேதி மாநில அளவிலான சதுரங்க போட்டி தனியார் கல்லுரியில் நடைபெற இருக்கிறது.

Admin

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் பொது மருத்துவ முகாம்- மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்

Admin

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-க்கு மார்பளவு சிலை வைக்க வேண்டும்- ஒபிஎஸ் மாவட்ட கழக செயலாளர் ஏசாதுரை கோரிக்கை!

Admin

Leave a Comment

error: Content is protected !!