தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் தந்தை பெரியார் நகரில் சுமார் 300 குடும்பங்கள் 10 வருடங்களாக அப்பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
அதில் 150 குடும்பங்களுக்கு வீட்டு வரியும் மின் இணைப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதியுள்ள 150 குடும்பங்களுக்கு வீட்டு வரி ரசீது கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் இடம் 6 மாத காலத்திற்கும் மேலாக முறையிட்டும் இன்று வரை வீட்டு வரி வசூலிக்கப்படவில்லை. எனவே அப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு மின் இணைப்பு குடிநீர் இணைப்பு வசதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே மின் இணைப்பு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கப்பெற உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பாக அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.