தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், பனை தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். பனையில் இருந்து, நுங்கு, ஓலை உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே எடுத்து, அவர்கள் விற்கின்றனர். பனங்கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால், பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். எனவே, பனைபொருட்கள் தயாரிப்பை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக, ‘பனை மேம்பாட்டு இயக்கம்’ என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தில், 2022 – 23 ம் ஆண்டு, பல்வேறு மானிய உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பனை பொருட்கள் தயாரிப்பு உபகரணங்கள் வாங்க, 4,000 ரூபாய் மதிப்பு கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்புகூடம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப் போருக்கு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது .
இதற்காக , தோட்டக்கலைத் துறையின், https :: tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வழியாக , விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது . சம்மந்தப்பட்ட தோட்டக்கலை அலுவலகங்களையும் , விவசாயிகள் அணுகலாம்.