முன்னாள் முதல்வர் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர் அறிவுறுத்தலின்படி ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பீச் ரோட்டில் அமைந்துள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவப் படத்திற்கு மாவட்ட அவை தலைவர் தங்கமாரியப்பன் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முத்துமாலை ஆகியோரின் தலைமையிலும்.கழக மகளிர் அணி துணை செயலாளர் சண்முக குமாரி முன்னிலையிலும் ஜெயலலிதாவின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அண்ணா நகர்பகுதி சின்னச்சாமி, திரஸ்புரம் பகுதி ஜான்பெர்னான்டோ,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மருதுபாண்டி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீரபத்திரன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் கண்ணன், ஹரிஹரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வினோத்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.