தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஹச் எம் எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜலட்சுமி தலைமையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் கூறியுள்ளதாவது; தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டுமான மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் என்று தனித்தனிவாரியமாக 17 நல வாரியங்கள் அமைக்கப்பட்டு அதில் தொழிலாளர்கள் பதிவு செய்து இன்றைய தேதியில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது பதிவு செய்துள்ளார்கள்.
அவர்களின் நலன் காத்திடவும் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் போனஸ் ரூபாய் 7,000 வழங்க வேண்டும். மேலும், இவ்வாறு வழங்கினால் பதிவு புதுப்பிக்கப்படாத தொழிலாளர்களும் புதியதாக சேரக்கூடிய தொழிலாளர்களுக்கும் பயன்பெறும் வகையில் திட்டத்தை முதலமைச்சர் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தற்பொழுது தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மிகவும் எளிமையாக தொழிலாளர்கள் பயன் அளிக்கின்ற அந்த திட்டத்தை எளிமைப்படுத்திட வேண்டும்.
17 நல வாரியங்கள் அமைக்கப்பட்டு தற்போது இணையதளத்தின் மூலமாக மாவட்டந்தோறும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் மாவட்டம் தோறும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
மேலும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஆண் குழந்தைகளுக்கு 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பயில்வதற்கு உதவித்தொகை வழங்கவும் மேலும், கட்டுமான நல வாரியத்தில் வழங்கக்கூடிய உதவித்தொகை போல் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உதவி தொகை வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறியுருந்தார்.
உடன், ஹச் எம் எஸ் கட்டுமான அமைப்பு சாரா மற்றும் உழைப்பாளர் சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.