முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதும் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு எட்டயபுரம் அ.தி.மு.க நகர செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், அவைத்தலைவர் கணபதி, மாரியம்மன், வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, காட்டன்பிரபு, சிவசங்கரபாண்டியன்,சீனா, செல்வி, சாந்தி, ரத்தினம், மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் வேலுசாமி, சுப்புலட்சுமி, மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்