Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் – பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்ததின் படி இன்று (01.11.2022) காலை தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம், மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 1 உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுவதை தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டமானது மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணக்குமார் தலைமையில், கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள், அனைவரையும் கௌரவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. பிறகு கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து கணக்கெடுத்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆன்லைன் மூலமாக வீட்டு வரி, மற்றும் சொத்து வரி செலுத்துதல், புதிதாக மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்குதல், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மகேஷ்வரி காமராஜ், பெலிக்ஸ், ராணி, வசந்த குமாரி, சுற்று சூழல் அணி ரவி (எ) பொன்பாண்டி, இளைஞரணி கௌதம், முன்னாள் வார்டு உறுப்பினர் ஆனந்த குமார், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் ஆண்கள் பெண்கள் என ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் சங்க தலைவராக எஸ்டிஎஸ் ஞானராஜ் பொறுப்பேற்றார்.

Admin

பிப்.23ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!

Admin

வ. உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாள்; வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது..

Admin

Leave a Comment

error: Content is protected !!