உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி மாலதி தலைமையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்செல்வி முன்னிலையில் குளத்தூர் அண்ணா நகர் காலனி பகுதியில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் அறிவித்ததற்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா காலத்தில் சிறப்பாக பணிசெய்தவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த உறுப்பினர்களை கௌரவித்து நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்பு கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து கணக்கெடுத்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலமாக வீட்டு வரி, மற்றும் சொத்து வரி செலுத்துதல், புதிதாக மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்குதல்,ஜல் திட்டம் பயன் பெரும் கிராமங்கள் அதன் இனைப்பு குறித்தும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், விளாத்திகுளம் ஒன்றிய பற்றாளர்கள், பணி மேற்பார்வையாளர் ஞானலதா, வார்டு உறுப்பினர்கள், கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் ஊர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.