தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு , திமுக அரசைக் கண்டித்து எட்டையாபுரம் பேரூர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியும், காய்கறிகளை மாலையாக அணிந்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், கழகப் பேச்சாளர் கருணாநிதி, 15 ஆவது வார்டு கவுன்சிலர் அய்யம்மாள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.