தூத்துக்குடி, கோவில்பட்டியில் 22 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக ஜேஸ்மின் லூர்து மேரி இருந்து வருகிறார்.
இவர் அவரது வார்டிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விதவைகள், ஆதரவற்றோர், முதியவர்கள், என அனைத்து பெண்களும் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திட தனித்தனியே கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று கையொப்பம் பெற்று மாவட்ட ஆட்சியரகத்தில் பதிவு செய்ய பெரும் சிரமமாக உள்ளது என்று புலம்பிய நிலையில், அவர் இதற்கென ஒரு புதிய முயற்சியை துவக்கி, இதற்கான ஒரு திட்டம் வகுத்து வார்டில் உள்ள அனைவரது அத்தாட்சி நகல்களை பெற முகாம் ஏற்படுத்தி அனைவரது நகல்களைப் பெற்று அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்பித்து, கையொப்பம் பெற்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எந்த பொருட்செலவும் இல்லாமல் 30க்கும் மேற்பட்ட நபர்களை முதற்கட்டமாக வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைப்பதற்காக அழைத்துச் சென்று பதிவு செய்திட முயற்சி மேற்கொண்டார் அதற்கு அவருக்கு பெறும் பாராட்டு பெண்கள் மத்தியில் தற்போது கிடைத்துள்ளது.
இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில், திமுக மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், பெண்களில் ஒரு சிலர் கூறும் போது இதுபோன்று அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்களது வார்டில் உள்ள இயலாத பெண்களை கண்டறிந்து அவர்களுக்கும் இது போன்று விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைத்து விட முயற்சித்தால் பெண்களின் பெறுமளவு நேர விரையமும், பண வரையவும், தவிர்க்கலாம் மேலும் தனியாக இதற்காக அலைவது கடினமாக உள்ளதால் இவர்களைப் போல் முகாம்களை அமைத்து எளிதாக்க முயற்சிக்கலாம் என தெரிவித்தனர்.