தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் விஸ்வத் டிரேடர்ஸ் கடை திறப்பு விழா நடைபெற்றது. கடையின் உரிமையாளர் ராஜசேகர்-முருகேஸ்வரி, தலைமையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் தமிழரசன், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, வேல்ராஜ், கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.