தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, தாளமுத்துநகர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
முகாமிற்கு, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கூட்டுறவு கடன் சங்க தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
பொது மருத்துவ முகாமில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தோல் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மகளிர் நல மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் மற்றும் மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். முகாமில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இவர்களுக்கு, இரத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் வாகனம் மூலம் டிஜிட்டல் எக்ஸ்-ரே கொண்டு நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக், சுகாதார ஆய்வாளர் வில்சன், மருத்துவமனை மேற்பார்வையாளர் மதிவானன், டாக்டர் குருமுருகன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி மற்றும் மருத்துவமனை அலுவலர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.