தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட சண்முக நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அப்பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு படிக்கும் குழந்தைகளுடன் உரையாடினார்.
அப்போது அவர்களுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுகிறதா? என்பதையும் அங்குள்ள அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிசாமி, நகர அவைத் தலைவர் அப்பாசாமி, நகர பொருளாளர் ஆரோக்கியராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜ், கண்ணன், அல்லித்துரை, பழனிகுமார், பழனி முருகன், கோபி, முருகன், தமிழ்ச்செல்வி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.