மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கம் (இணைப்பு சிஜடியூ சங்கம்) நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து 20.12.22 இன்று காலை நடைபெற்றது.
கூட்டத்தில் முக்கிய முடிவுகளான, இந்திய சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ் விஸ்வநாததாஸ் 82வது நினைவு நாள் அனுசரிப்பு மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது போன்று முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும், வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா, முடி திருத்தும் நிலையங்களுக்கு மானிய விலை மின்சாரம் கொடுக்க கோரியும், சலூன் கடைக்கு வரி வசூல் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசி நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருகின்ற 27ந் தேதி அன்று போராட்டம் நடத்தப்படும் என்று ஒரு மனதோடு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், சிஜடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சிஜடியூ மாநிலச் செயலாளர் ஆர். ரசல், பொதுச்செயலாளர் நாகராஜ், கௌரவ தலைவர் சதாசிவம், பொருளாளர் வேல்முருகன், துணைச் செயலாளர் சரவணகுமார் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.