தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைசேவல் கிராமத்தில் உள்ள காலனியில் அதிமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக கழக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இவ்விழாவில், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், நாலாட்டின்புதூர் கிளைச் செயலாளர் தாஸ், இடை சேவல் கிளைச் செயலாளர் சண்முகையா, அன்னை தெரசா நகர் கிளை செயலாளர் மாரிமுத்து,தமிழக விவசாய அணி மாவட்ட செயலாளர் அருமைராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, பழனி குமார், கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.