அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் பொதுக்குழு இயற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்..
பின்னர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், அதிமுக பொது குழு தீர்மானம் உயர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்று எட்ப்பாடியர் தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக தான் என்று அனைத்து நீதிமன்றங்கள் தெரிவித்து விட்டது. நிலுவையில் இருந்த அதிமுக பொது குழு தீர்மானம் – இன்று இறுதி தீர்ப்பில் ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும், தீர்மானங்கள் அனைத்தும் செல்லும், என உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தான் உண்மையான அதிமுகவினர். ஒ.பி.எஸ் இனி மேல் புதிய கட்சி ஆரம்பித்தாலும் சரி, எதாவது தொழில் செய்தாலும் சரி எங்களுக்கு கவலை இல்லை.. இனிமேல் அந்த நிலைப்பாட்டை தான் அவர் எடுக்க வேண்டி வரும் அதிமுக பெயரை வேறு யாரும் இனிமேல் பயன்படுத்த முடியாது. ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நேரத்தில் தினகரன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர் தான் ஓபிஎஸ். அப்போது அவர்களுக்குள் இருந்த கள்ள உறவு இப்போது வெளி வந்துள்ளது.. மதுரை மாநாட்டிற்கு பிறகு ஓபிஎஸ்-ன் கூடாரமே காலியாகி வருகிறது.. எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டிற்கு பின் தமிழகத்தில் முதன்மை இயக்கமாக அதிமுக மாறிவிட்டது. அதிமுகவிற்கும், மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.. கட்சி தொடங்கிய காலம் முதல் இன்று வரை
புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர் புரட்சி தலைவி அம்மாவின் விழா தான். மாநாட்டிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தேசிய அளவிலான தலைவராக உயர்ந்துள்ளார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா போன்ற பட்டங்களை எல்லாம் பெறும் போது விமர்சித்தார்கள். ஆனால் இன்றளவும் அவர்களது பெயர்கள் நிலைத்து நிற்கிறது. ‘விடியல் தருவேன், என்று கூறிய அந்த விடியாத ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி 3 மதத்தினரும் சேர்ந்து புரட்சித் தமிழர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர்.. அதனை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.