தூத்துக்குடி மறைமாவட்டம், தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலயத்திருவிழா இன்று (ஆக25), மாலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற திருப்பலிக்கு அருட்திரு.புரோகிரஸ், விஜயன், ஜாண்ரோஸ், தலைமையில் சிறப்பு அழைப்பாளராக அருட்திரு. அமல்ராஜ் வருகை தந்து கொடியேற்றினார்.
இரண்டாம் நாளான (ஆக26), அருட்திரு.வின்சென்ட் தலைமை வகித்து மறையுரை ஆற்றுகிறார். 3ஆம் நாள் அருட்திரு.சந்தீஸ்டன், 4ஆம் நாள் அருட்திரு. ரினோ, 5ஆம் நாள் அருட்திரு.வினித்ராஜா, 6ஆம் நாள் அருட்திரு.சஜன், 7 ஆம் நாள் அருட்திரு.ஜெயக்குமார், 8ஆம் நாள் பங்குதந்தை நெல்சன்ராஜ், 9ஆம் நாள் காலை 7 மணிக்கு புதுநன்மை திருப்பலியில் அருட்தந்தையர்கள் தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர திருவிழா (செப் 2), சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை, அருட்திரு. சகாயம் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறார். செப் 3ம் தேதி காலை திருப்பலி அருட்திரு.ஜான்செல்வம் மற்றும் அருட்தந்தையா்கள் தலைமையில் நடைபெறுகிறது.
திருவிழாவினை ராஜபாளையம் இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர் நெல்சன்ராஜ், அமல்ராஜ், திருஇருதய அருட்சகோதரிகள், அனைத்து சபைகள் அன்பியங்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள், மற்றும் கோவில் ஊழியர்கள் விமல், தொம்மை அந்தோணி, நிக்சன், வினோத்சிங் சிறப்பாக செய்து வருகின்றனர்.