தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள “அருள்மிகு” ஊர்காவல் ஸ்ரீ பைரவர் சாமி திருக்கோவில் 4ம் ஆண்டு கொடை விழா நடைபெற்றது. தீத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமையில் தமிழ்நாடு வர்த்தக கழக பொது செயலாளர் வெள்ளைச்சாமி நாடார் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஊர் மக்களுக்கு அசைவ பொது விருந்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, சோழபுரம் முனியசாமி, அம்பிகை பாலன், கடம்பூர் விஜி, கோமதி, கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.